Friday, July 24, 2009

முன்னோட்டம்

ஒவ்வொரு பண்பட்ட மனிதனும் தான் இடம்பெயரும் பொழுது தன்னுடன் தான் வசித்த இடத்தின் நினைவுகளையும் கலாசாரத்தின் சுவடுகளையும் சுமந்தே செல்கிறான். காலப்போக்கில் தான் வசிக்கும் இடத்திற்கும் வசித்த இடத்திற்கும் ஏற்படும் இடைவெளி விரிந்து கொண்டே செல்கிறது. ஒரு நாகரீகத்தின் பிம்பம் மற்றொரு இடத்தில் ஏதேனும் ஓர் வகையில் பிரதிபலிப்பதை வரலாற்று ஆய்வாளர்கள் பல்வேறு இடங்களில் சுட்டிக் காட்டியுள்ளனர். மதுரை பற்றி எரியும் முன்னர் அங்கிருந்து புலம்பெயர்ந்தோர் கேரளத்தின் ஓர் பகுதியில் குடியேறி வாழையடி வாழையாக (தென்னையடி தென்னையாக) வாழ்ந்து வருவதாகவும், இருவருக்கும் இடையே நிலவும் பல்வேறு கலாசார ஒற்றுமைகள் இருப்பதாகவும் வரலாற்று ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

நான் வசித்து, சுவாசித்து, வாழ்ந்த மண்ணின் நினைவுகளையும், சந்தித்த மனிதர்களின் சுவடுகளையும் உங்களோடு பகிர்ந்து கொள்ளவும், அடடா இது என் இளம்பிராயம் போல் உள்ளதே என்று உங்களை உங்களுக்கே நினைவுபடுத்தவும் என் சிறு முயற்சி இது. இதை படிக்கும் ஏதோ ஒரு தருணத்தில் உங்கள் பழைய நண்பனையோ , உங்கள் பெற்றோரின் கைகோர்த்து நடந்த நாட்களையோ நீங்கள் நினைவுகூர்ந்தால் அது என் எழுத்தின் வெற்றி.

நான் பிறந்து வளர்ந்தது நெல்லை மாவட்டத்தில் உள்ள கடையநல்லூர் என்னும் நகரமும் அல்லாத கிராமமும் அல்லாத ஓர் ஊர். மேற்குத் தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் முகில் கூட்டங்கள் முடியும் இடத்தில் துவங்கும் ஓர் அற்புத உலகம் அது. என் நினைவுகளின் ஊடே நான் நடந்து உங்களையும் நடத்தி செல்லும் போது இது குறித்து மேலும்...

4 comments:

  1. Seems like u r gonna give ur past diaries.... waiting to hear from u abt the stories.... esp the schooling stories in down south...will be a very new experience to me... Hope u gonna reveal all ur crushes(divya - give him the freedom to write everything)...Very good Start

    - Ganesh

    ReplyDelete
  2. Karthi.. Good to recollect all our School days ..

    ReplyDelete